Updated Feb 12, 2026 · v1.0.0
Non-stop music recital from Tamil literature! இலக்கியப் பாடல்களைக் கேட்டு மகிழ!
பொழில் பண்பலையில் எண்ணற்ற தமிழிலக்கியப் பாடல்களை இசையோடு வழங்கி வருகிறோம். இலக்கியப் பாடல்கள், உரைகள், கவிதைகள், தமிழ் பற்றிய அரிய செய்திகள் மற்றும் மாணவர் படைப்புகளையும் வழங்கி வருகிறோம். கம்பராமாயணம், பத்துப்பாட்டு நூல்கள் (அனைத்தும்), விவேக சிந்தாமணி, திருக்குறள், நான்மணிக்கடிகை, திருப்புகழ், திருமந்திரம், சிலப்பதிகாரம், ஆசாரக்கோவை, குறுந்தொகை, நற்றிணை, குற்றாலக் குறவஞ்சி, முக்கூடற்பள்ளு என பல்வேறு தமிழிலக்கிய நூல்களில் இருந்து பாடல்களை முறையாக கற்றறிய வழிவகை செய்யப்பட்டுள்ளது.... மேலும், தமிழ்ச் சான்றோர்களுடைய சிறப்பு தகவல்கள், கவிதைகள், தன்னம்பிக்கையூட்டும் வழிமுறைகள், வாழ்வியல் தத்துவங்கள் என பல்வேறு வகைகளில் தமிழைத் திரட்டுப்பாலாய், தெவிட்டாத தேனமுதாய், சொட்டுச் சொட்டாக அன்றாடம் உட்கொள்ளும் அருமருந்தாய், செவிநுகர் விருந்தாய் வானலையில் இணையம்வழி உங்கள் இதயத்தை இதமாக்கிக் கொண்டிருக்கிறது ‘பொழில் பண்பலை’ ! இலக்கியத்தில் இளைப்பாற இலக்கியப் பொழிலுடனும் பொழில் பண்பலையிலும் இணைந்திருங்கள் ! இன்ப தமிழ்ப் பாக்களை இடைவிடாது கேட்டு மகிழுங்கள் !
0 years on Google Play
This app isn't currently appearing in any tracked top charts.